Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய வெள்ளம்: ஜொகூரில் வீடிழந்த நிலையில் 5,000க்கும் மேற்பட்டவர்கள்

மலேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மக்களின் வாழ்வில் சங்கடத்தை உண்டாக்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -
மலேசிய வெள்ளம்: ஜொகூரில் வீடிழந்த நிலையில் 5,000க்கும் மேற்பட்டவர்கள்

(கோப்புப் படம்: AFP / Mohd RASFAN)

மலேசியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மக்களின் வாழ்வில் சங்கடத்தை உண்டாக்கியுள்ளது.

ஜொகூரில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,737இலிருந்து 5,478க்கு உயர்ந்துள்ளதாக ஜொகூர்ச் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் R வைத்தியநாதன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் செகாமாட், தாங்காக், கோத்தா திங்கி, மெர்சிங், குளுவாங், பத்து பாஹாட், மூவார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அவற்றுள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் செகாமாட் பகுதியில் வசிப்பவர்கள். மலேசியாவில் 5 ஆறுகளில் அபாயமான நிலையில் நீர் பெருகியுள்ளது. அவற்றில் 4 ஆறுகள் செகாமாட் பகுதியில் உள்ளதாக நீர்ப்பாசன, வடிகால் பிரிவு தெரிவித்தது.

இன்று பிற்பகல் 3.10 மணியளவில் ஜொகூர் பாரு, கோத்தா திங்கி, பொந்தியான், கூலாய் போன்ற ஜொகூரின் தெற்குப்புறப் பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு 79 தற்காலிக நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உணவு வழங்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்