Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் வெள்ளம் - சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சில பகுதிகளில் வெள்ளம்.

திரெங்கானு, கிளந்தான் (Terengganu, Kelantan)ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியுள்ளது.

அந்த இரண்டு மாநிலங்களிலும் வெள்ளம் அபாய அளவை எட்டியுள்ளது.

தற்காலிக நிவாரண முகாம்களில் உணவு போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்யுமாறு மீட்புக் குழுக்களுக்குப் பிரதமர் இஸ்மயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) உத்தரவிட்டுள்ளார்.

முகாம்களில் COVID-19 நோய் பரவாமல் தடுக்க நாட்டின் சுகாதார அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் நிவாரண நிலையங்களுக்கு அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும் மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

திரெங்கானுவின் 8 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 90 வெள்ள நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடுகளை விட்டு வெளியேறியோர் எண்ணிக்கை
4,000க்கு மேல் அதிகரித்துள்ளது.

நேற்று அந்த எண்ணிக்கை சுமார் 3,000ஆக இருந்தது.

கிளந்தான் மாநிலத்தில் 3,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களை நாடியுள்ளனர்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்