Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'உயிர்களைக் காக்கவேண்டும், அது ஒன்றே குறிக்கோள்' - வேறுபாடு பார்க்காமல் விரைந்து உதவும் மலேசியர்கள்

மலேசியாவின் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  

வாசிப்புநேரம் -

மலேசியாவின் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பலர் தங்கள் உடைமைகளைத் தொலைத்து
உயிர்தப்பினால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களுக்குப் பலரும் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

இனம், சமயம், மொழி என்று எந்த வேறுபாடுமின்றி மனிதநேய உணர்வோடு அவர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டோருக்கு வயிறார உணவு வழங்கப்படுகிறது. நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

உணவகங்களும் உணவு வர்த்தகங்களும் குறைந்த விலையில் உணவை விற்கின்றன.

மலேசியர்கள், மனிதநேயமிக்கவர்கள் என்பதற்கு இதுவே சான்று எனக் கூறுகிறார், சிலாங்கூரைச் சேர்ந்த மருத்துவர் பரத்.

இவரும் இவரது நண்பர்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சொந்தமாக மீட்புக் குழுவை அமைத்துச் செயல்படுகின்றனர்.

சொந்தமாகப் படகொன்றையும் வாங்கி, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கின்றனர்.

பொதுவாகவே ஆபத்தான வேளைகளில் மலேசியர்கள் வேற்றுமைகளை மறந்து ஒரே குடும்பமாகி விடுவார்கள் என்கிறார், பிரபல உள்நாட்டு நடிகரும் தயாரிப்பாளர், இயக்குநருமான திரு.கானா.

அரசாங்கம் மட்டுமல்லாமல் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை மக்களுக்கு முன்வந்து உதவுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலைமை படிப்படியாக மேம்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்