Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெளிநாடுகளில் இயங்கும் வேலை மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய மலேசியர்கள் தாயகம் திரும்புவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை

வாசிப்புநேரம் -

வெளிநாடுகளில் இயங்கும் வேலை மோசடிக் கும்பல்களிடம்  சிக்கியிருப்போர் மீண்டும் பாதுகாப்பாகத் தாயகம்  திரும்புவதை உறுதிசெய்ய மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) அதனைத் தெரிவித்தார். 

அண்மையில் இணையக் காதல் மோசடியில் சிக்கிய 23 வயது மலேசியர் ஒருவர்  தாய்லந்து சென்றார்.
 
பிறகு அங்கிருந்து மியன்மாரில் மோசடிக் கும்பல்களில் வேலை செய்யக்  கட்டாயப்படுத்தப்பட்டார்.  பின்னர் அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமரின் கருத்து வந்துள்ளது. 

அந்த விவகாரம் குறித்து மலேசிய அரசாங்கம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகத் திரு. இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

அதுபற்றி இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவிருப்பதாக அவர் சொன்னார்.

வெளிநாடுகளில் வேலையில் சேர விரும்புவோரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இம்மாதத் தொடக்கம்வரை சுமார் 200 வேலை மோசடிப் புகார்கள் பெறப்பட்டதாய்ப் அரசாங்கம் சாரா பல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அந்தப் பிரச்சினையைக் கையாள, ஆசியான்-சிறப்புக் குழு ஒன்றை அமைப்பது பற்றிப் பரீசிலிக்கப்படுவதாகப் பிரதமர் அலுவலக அமைச்சர் அப்துல் லத்திஃப் அகமது (Abdul Latiff Ahmad) குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்