Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: வேலை மோசடிகளில் பாதிக்கப்பட்ட குடிமக்களை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரம்

வாசிப்புநேரம் -

மலேசியா வேலை மோசடிகளில் பாதிக்கப்பட்ட குடிமக்களைப் பத்திரமாக மீட்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

அதற்கென அமைக்கப்பட்ட சிறப்புக் குழு உறுப்பினர்கள்,  வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் தலைமையில் முதன்முறை சந்தித்துப் பேசினர். பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லந்து ஆகிய நாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் கவனம் செலுத்தும். 

இதுவரை சுமார் 300 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் தொடர்புடைய பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தூதரகங்களின் உதவியோடு  எஞ்சியவர்களை மீட்டுவர மலேசிய அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா கூறினார். 

இதற்கிடையே மலேசிய உள்துறை அமைச்சு புதிய காவல்துறைப் பணிக்குழுவை அமைத்துள்ளது. வட்டார அளவில் வேலைவாய்ப்பு மோசடிகளை முறியடிக்க  அனைத்துலகக் காவல்துறை, ஆசியான் நாடுகளின் காவல்துறை ஆகிய தரப்புகளுடன் சிறப்புக் குழு அணுக்கமாகப் பணியாற்றும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்