Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆசியா

மலேசியாவில் 5 முதல் 11 வயதுப் பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி போட ஒப்புதல்

மலேசியாவில் பிள்ளைகளுக்கு Pfizer நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசி போடுவதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் 5 முதல் 11 வயதுப் பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி போட ஒப்புதல்

(கோப்புப் படம்: AP)

வெளியீடு : 06 Jan 2022 10:49PM புதுப்பிப்பு : 06 Jan 2022 10:53PM

மலேசியாவில் பிள்ளைகளுக்கு Pfizer நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசி போடுவதற்கு நிபந்தனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளமுடியும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த CanSino நிறுவனத்தின் தடுப்புமருந்தை Booster தடுப்பூசியாகப் போட்டுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் பெரியவர்களில் சுமார் 98 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஓமக்ரான் ரகக் கிருமி பரவும் வேளையில், மேலும் அதிகமானோரை Booster தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசாங்கம் ஊக்குவித்துவருகிறது.

அங்கு அண்மையில் இரண்டாவது தடுப்பூசிக்கும் Booster தடுப்பூசிக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டது.

மலேசியாவில் 245 ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

- Reuters/nh 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்