Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய மாமன்னரும் மற்ற சுல்தான்களும் நாளை சந்திக்கவுள்ளனர்....

வாசிப்புநேரம் -
மலேசிய மாமன்னரும் மற்ற சுல்தான்களும் நாளை சந்திக்கவுள்ளனர்....

(AFP/Malaysia's Department of Information/Shaiful Nizal ISMAIL)

மலேசிய மாமன்னர் நாட்டின் மற்ற சுல்தான்களை நாளை (24 நவம்பர்) சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அரண்மனையில் நடைபெறவுள்ள அந்தச் சந்திப்பு காலை 10.30 மணி அளவில் இடம்பெறும். 

அது குறித்து The star செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

சந்திப்பு சுமார் 3 மணிநேரம் நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னர் மத்திய அரசாங்கத்தை அமைப்பது குறித்து  சுல்தான்களிடமிருந்து ஆலோசனைகளைக்  கேட்கவிருப்பதாக நம்பப்படுகிறது. 

இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. 

மாமன்னர் சுல்தான் அப்துல்லா பக்கத்தான் ஹராப்பானும் பெரிக்கத்தான் நேசனலும் அடங்கிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முயன்றுவருகிறார். 

ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. 

சுல்தான்கள் ஏற்கெனவே அடுத்த திங்கட்கிழமை (28 நவம்பர்) நடைபெறவுள்ள Conference of Rulers எனும் உச்சநிலைச் சந்திப்பில் கலந்துகொள்ளவிருந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்