Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா செய்தியில் மட்டும்

மலேசிய நாடாளுமன்றக் கூட்டம்... என்ன நடந்தது?

வாசிப்புநேரம் -

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 18) தொடங்கியது.

முன்னதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி சில முக்கியமான விவகாரங்களைப் பற்றிப் பேசினார்.

நாட்டில் இருக்கும் வாழ்க்கை செலவினங்கள் குறித்தும் அரசாங்கத்தின் உதவித் ஹதொகை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேள்வியெழுப்பினார்.

இதுகுறித்து பதிலளித்த இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தின் உதவித்தொகை வறுமைக் கோட்டின்கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைப்பபதற்காக ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 

அதோடு பலகாரம் விற்பனை செய்பவர்கள் உதவித்தொகையில் வழங்கப்படும் 1 கிலோகிராம் சமையல் எண்ணெயை வாங்கக்கூடாது என அவர் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அனைவருமே இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர்களைத் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஆனால் பலகார வியாபாரம் செய்பவர்கள் உதவித்தொகையில் வழங்கப்படும் சமையல் எண்ணெயை வாங்கக்கூடாது  என இஸ்மாயில் சம்ரி கூறியதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியால் மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

அதோடு வெளிநாட்டில் உள்ள பெட்ரோனாஸ் சொத்துகளை சட்டபூர்வமாகக் கையகப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் செய்ய முயன்றனர். 

அதற்கு நாடாளுமன்றத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. 

இதனால் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  

இதனிடையே வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் வாசிக்கப்பட்டபோது அவர்கள் இடைமறித்துப் பேசினார்கள். அதோடு வெளிநடப்பும் செய்தனர்.

நாடாளுமன்றம் கூடி இரண்டு நாள்களாகியும் இன்னமும் 15ஆவது பொதுத்தேர்தல் குறித்த எந்த செய்தியும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. 

கட்சித் தாவல் மசோதா குறித்த விவாதமும் நடைபெறவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்