Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விலைவாசி அதிகரிப்பு, மெதுவடையும் வளர்ச்சி, இனவாதம் - மலேசியப் பிரச்சினைகளைக் கையாளவேண்டிய பொறுப்பில் அன்வார் இப்ராஹிம்

வாசிப்புநேரம் -

மலேசிய எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹராப்பானின் தலைவர் அன்வார் இப்ராஹிம், நாட்டின் பத்தாவது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இன்று மாலை 5 மணிக்கு 75 வயது திரு. அன்வார் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று அரண்மனை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 

விலைவாசி உயர்வு, மெதுவடையும் பொருளியல் வளர்ச்சி போன்ற பிரச்சினைளுக்குத் தீர்வுகாண்பதோடு இனவாதச் சிக்கல்களைக் களைவதிலும் திரு அன்வார் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மற்ற அரசியல்வாதிகளுடன் கலந்துபேசி, இணக்கம்கண்டு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவேண்டிய நிலையில் திரு. அன்வார் இருக்கிறார். 

மலேசியாவின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்தும் அவர் விரைவில் அறிவிக்கவேண்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்