Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'அதிகாரத்தில் தெளிவு இருக்கட்டும்' - பொதுத்தேர்தலுக்குத் தயாராகும் மலேசியக் காவல்துறை

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தலில் பணியாற்றவுள்ள அரச மலேசியக் காவல்படை அதிகாரிகள் தங்களது அதிகார வரம்புகள் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

காவல்துறை, அரசாங்கம் ஆகிய தரப்புகளின் நம்பகத்தன்மையில் எந்தத் தாக்கமும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய அது அவசியம் என்று காவல்படைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

அதிகாரிகள் குற்றவியல் சட்டத்தையும் அது தொடர்பான இதர சட்டங்களையும் நன்கு  படித்துப் புரிந்து வைத்திருக்கவேண்டும் என்று அவர் சொன்னார். 

வேலை நேரத்தில் பொறுமையைச் சோதிக்கும் வகையான சம்பவங்கள் நடந்தாலும் நிபுணத்துவப் பண்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

தேர்தலின்போது வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதனைக் கையாளும் முறைகள் பற்றியும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் சமயங்களில் காவல்துறை அதிகாரிகளையும் மீட்பு நடவடிக்கைக்கான உபகரணங்களையும் அனுப்பக் காவல் தலைமையகங்களுக்கும் மாவட்டக் காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் மலேசியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைக் காவல்துறை பாடமாக எடுத்துக்கொள்வதாகவும் திரு அக்ரில் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்