Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பருவநிலை மாற்றம் குறித்த திட்டத்தை வரைய, ஐக்கிய நாட்டு நிறுவனத்திடமிருந்து 3 மில்லியன் டாலர் நிதி கோரும் மலேசியா

மலேசியா, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் தேசியத் திட்டத்தை வரைய, ஐக்கியநாட்டு நிறுவனத்தின் பசுமைப் பருவநிலை நிதியத்திடமிருந்து 3 மில்லியன் டாலர் நிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றம் குறித்த திட்டத்தை வரைய, ஐக்கிய நாட்டு நிறுவனத்திடமிருந்து 3 மில்லியன் டாலர் நிதி கோரும் மலேசியா

படம்: Bernama

மலேசியா, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் தேசியத் திட்டத்தை வரைய, ஐக்கியநாட்டு நிறுவனத்தின் பசுமைப் பருவநிலை நிதியத்திடமிருந்து 3 மில்லியன் டாலர் நிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மலேசியாவில் நேர்ந்த பெருவெள்ளம் காரணமாகச் சுமார் 70,000 பேர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், அந்நாட்டுச் சுற்றுப்புற அமைச்சு அத்தகையை வேண்டுகோளை விடுத்துள்ளது.

மலேசியா, வெள்ளக் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் ஏறக்குறைய 3 மில்லியன் டாலர்தான்.

பருவநிலை மாற்றம் குறித்த திட்டங்களை அமல்படுத்த, 3 மில்லியன் டாலருக்கும் மேல் செலவாகும் என்பதை நிபுணர்கள் சுட்டினர்.

எனினும், மலேசியாவின் சுற்றுப்புற, நீர்வள அமைச்சு, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வரையப்படும் என்று தெரிவித்துள்ளது.

வேளாண், உணவுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், வனவியல், கட்டமைப்பு- போன்றவற்றில் அந்தத் திட்டம் கவனம் செலுத்தும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்