Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"தெரு நாய்களைப் பிடிக்க தெளிவான வழிகாட்டி வேண்டும்" - மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

வாசிப்புநேரம் -
"தெரு நாய்களைப் பிடிக்க தெளிவான  வழிகாட்டி வேண்டும்" - மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

(படம்: Bernama)

நாய்களைப் பிடிப்பதற்குத் தெளிவான வழிகாட்டி நடைமுறையை வெளியிடுமாறு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் யங் ஷெபுரா ஒத்மான் (Young Syefura Othman) அந்நாட்டு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாஹாங் மாநிலத்திலுள்ள பெந்தோங்கில் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரியிடம் பிடிபட்ட தமது வளர்ப்பு நாயை மீட்கப் போராடியபோது 85 வயது ஆடவர் மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவத்தை அவர் சுட்டினார்.

வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்கும் நடைமுறை குறித்துத் தெளிவான வழிகாட்டி முறை அவசியம் என்றார் அவர். இதன்வழி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் யங் ஷெபுரா சொன்னார்.

சம்பவத்தின் பின்னணி

கடந்த மே 24ஆம் தேதி நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரியிடம் சிக்கிய தமது வளர்ப்பு நாயை மீட்க முயற்சி செய்திருக்கிறார் லவ் செய் கியூ ( Law Sei Kiew) என்ற 85 வயது ஆடவர். அப்போது அவர் மயங்கி கால்வாய்க்குள் விழுந்ததாக The Star செய்தி வெளியிட்டது.

சம்பவம் பற்றி CNA செய்தியிடம் பேசிய Malaysian Dogs Deserve Better அமைப்பைச் சேர்ந்த ஐரீன் லோ (Irene Low), நாய் வளர்போரையும் அவற்றை மீட்க முயற்சி செய்வோரையும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் எதிரிகளைப்போல நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

அந்த ஆடவரிடமிருந்து அவரது நாயை வலுக்கட்டாயமாகப் பிடித்துச்செல்ல அதிகாரிகள் ஏன் முயற்சி செய்தனர் என்பது தமக்கு இன்னும் புரியவில்லை என்றார் அவர்.

மலேசியாவில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்