Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தேசிய முன்னணி, GPS கூட்டணிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்க மலேசியப் பிரதமர் திட்டம்

வாசிப்புநேரம் -
தேசிய முன்னணி, GPS கூட்டணிகளுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்க மலேசியப் பிரதமர் திட்டம்

(படம்: MOHD RASFAN / POOL / AFP)

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan), தேசிய முன்னணி (Barisan Nasional), சரவாக் கட்சிகள் கூட்டணி (Gabungan Parti Sarawak) ஆகிய முக்கியக் கூட்டணிகளைக் கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.

பெரிக்கத்தான் நேசனல் (Perikatan Nasional), சபா மக்கள் கூட்டணி (Gabungan Rakyat Sabah) போன்ற மற்ற கூட்டணிகள் அதில் இணைவது சாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் செய்தியாளர் கூட்டத்தில் திரு. அன்வார் பேசினார்.

பிளவுபட்ட அரசியல் சூழலை ஒன்றிணைப்பது தமது நோக்கம் என்றார் அவர்.

அனைத்துக் கட்சிகளையும் கூட்டணிகளையும் கொண்ட ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை நடத்தவிருப்பதாகத் திரு. அன்வார் வலியுறுத்தினார்.

மலேசியப் பொருளியலை மேம்படுத்துவது தமது முன்னுரிமைகளில் ஒன்று என்றார் அவர்.

நாட்டில் விலைவாசி அதிகரிப்பதுடன் வளர்ச்சி குறையும் வேளையில் திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சுமார் ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.

தமது ஆட்சியின்கீழ் எவரும் பாகுபாட்டைச் சந்திக்கமாட்டார்கள் என்றும் பிரதமர் அன்வார் உறுதியளித்தார்.

மலேசிய நாடாளுமன்றம் டிசம்பர் 19ஆம் தேதி கூடவிருப்பதாக அவர் கூறினார்.

மலேசிய அரசாங்கத்தை வழிநடத்தத் தமக்குப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கும் நம்பிக்கைத் தீர்மானத்தை அப்போது தாக்கல் செய்யவிருப்பதாகத் திரு. அன்வார் கூறினார்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa