Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்துக் கடைத்தொகுதியில் 30 ஆண்டுகள் தனியாகத் தவிக்கும் கொரில்லா... "விடுதலைக்கான வாய்ப்பில்லை"

வாசிப்புநேரம் -

7 மாடிக் கடைத்தொகுதி...

ஒரு மாடியில் மலிவு விற்பனையில் விற்கப்படும் வாசனைத் திரவம், உள்ளாடைகள்... அதற்கு மேலிருக்கும் மாடியில் கூண்டில் தனியாகத் தவிக்கும் கொரில்லா (gorilla)...

30 ஆண்டுகளாகக் கூண்டில் அடைக்கப்பட்ட அந்த விலங்குக்கு விடுதலை இல்லாதது போல் தெரிகிறது.

சென்ற ஆண்டு இறுதியில் அதன் விடுதலைக்காகச் சில ஆர்வலர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். 
அப்படியிருந்தும் புவா நொய் (Bua Noi) என்றழைக்கப்படும் அந்த கொரில்லா இன்னும் கூண்டில்தான் இருக்கிறது.

இம்மாதம் ஒரு விலங்குத்தோட்டம், புவா நொயைப் பெற்றுக்கொள்ள 100,000 பாத் (baht) அளிக்கத் தயார் என்றது. இருப்பினும், புவா நொயின் உரிமையாளர்கள் அதனை விடுவிக்க மறுக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்