Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜன்னலில் இருந்து விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய ஆடவர் - புகழும் இணையவாசிகள்

வாசிப்புநேரம் -
ஜன்னலில் இருந்து விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய ஆடவர் - புகழும் இணையவாசிகள்

(Screengrabs: Twitter/@zlj517)

சீனாவின் ஸேஜியாங் (Zhejiang) வட்டாரத்தில், அடுக்குமாடி வீட்டின் ஐந்தாம் தளத்தில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னலில் இருந்து விழுந்த இரண்டு வயதுச் சிறுமியை ஆடவர் ஒருவர் பிடித்துக் காப்பாற்றியிருக்கிறார்.

இந்த சம்பவத்தின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

காணொளியில் 31 வயது ஷென் டோங் (Shen Dong) என்ற ஆடவர், ஜூலை 19 அன்று ஒரு கட்டடத்தின் முன்பகுதியை நோக்கி விரைவதும், விழும் பிள்ளையைப் பிடிப்பதும் பதிவாகியுள்ளது.

அப்போது, அவர் கைத்தொலைபேசியில் பேசுவதைக் காணமுடிந்தது என்று South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் கீழே விழும் சிறுமியை பிடிக்கும் தருவாயில், தமது கைத்தொலைபேசியை வீசியெறிந்தார்.

"எனக்கு விவரங்கள் ஏதும் நினைவில் இல்லை. ஆனால், குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமென்று மட்டும் தோன்றியது."

"நான் அதைச் சரியான நேரத்தில் செய்தது அதிர்ஷ்டம். இல்லையெனில், என்ன நிகழ்ந்திருக்கும் என நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது."என்றார் அவர்.

அவரது தீரச் செயலை இணையவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்