சாப்பிட்டுக்கொண்டிருந்த udon நூடல்ஸில் உயிருடன் இருந்த தவளையைக் கண்டு திடுக்கிட்ட ஆடவர்
வாசிப்புநேரம் -

Twitter/Kaito
ஜப்பானில் கைட்டோ (Kaito) என்பவர் உடொன் (udon) நூடல்ஸைச் சாப்பிட்டு முடிக்கும் தறுவாயில் அவரது உணவில் உயிருடன் சிறு தவளை ஒன்று குதிப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
அவர் அந்தக் காணொளியை அவரது Twitter பக்கத்தில் பகிர்ந்தார்.
இதுவரை 6.4 மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுள்ளனர்.
அவர் வாங்கிய 'Marugame Seimen's Spicy Dandan Salad Udon' உணவில் தவளை குதிப்பதைக் கண்டு அவரது Twitter பக்கத்தைப் பின்பற்றுவோரிடம் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அந்த உணவகம் அதன் இணையத்தளத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
தொழிற்சாலைகள் அனைத்தையும் சோதனையிட்ட பிறகு பச்சைக் காய்கறிகளைக் கொண்ட உணவை இப்போதைக்கு விற்பதில்லை என்று அது முடிவெடுத்துள்ளது.

ஆதாரம் : CNA