Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புகை பிடித்துக்கொண்டே 42 கிலோமீட்டர் ஓடிய ஆடவர்

வாசிப்புநேரம் -

42 கிலோமீட்டர்.....மூன்றரை மணிநேரத்தில் ஓட்டம்....புகை பிடித்துக்கொண்டே...

சீனாவின் குவாங்சோ (Guangzhou) வட்டாரத்தைச் சேர்ந்த 50 வயது ஆடவர் வாயில் சிகரெட் பிடித்தவாறே ஓட்டத்தில் ஈடுபடுவதைக் காட்டும் படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அது குறித்து South China Morning Post தகவல் வெளியிட்டது.

கிட்டத்தட்ட 1,500 பேர் பங்கேற்ற நெடுந்தொலைவோட்டத்தில் சன் என்ற அந்த ஆடவர் 574ஆம் இடத்தில் முடித்தார்.

ஓட்டப்பந்தயங்களில் எப்போதும் புகை பிடித்துக்கொண்டே ஓடும் அவர் 'புகை பிடிக்கும் அண்ணன்' என்ற பட்டப் பெயரைப் பெற்றுள்ளார்.

சன்னின் செயலைப் பார்த்து இணையவாசிகள் சிலர் வியந்துள்ளனர்.

சிலரோ சன் நல்ல முன்னுதாரணமாகச் செயல்படவில்லை என்று சாடியுள்ளனர்.

சன்னுக்கு அருகில் இருந்த பங்கேற்பாளர்கள் சிகரெட் புகையைச் சுவாசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்