Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜக்கர்த்தாவிற்கு நிவாரண உதவிக் குழுவை அனுப்பியுள்ள சிங்கப்பூர்த் தனியார் அமைப்பு

ஜக்கர்த்தாவிற்கு நிவாரண உதவிக் குழுவை அனுப்பியுள்ள சிங்கப்பூர்த் தனியார் அமைப்பு

வாசிப்புநேரம் -
ஜக்கர்த்தாவிற்கு நிவாரண உதவிக் குழுவை அனுப்பியுள்ள சிங்கப்பூர்த் தனியார் அமைப்பு

(படம்: AFP/Dasril Roszandi)

சிங்கப்பூரில், பேரிடர் நிவாரண உதவியில் முன்னணி வகிக்கும் தனியார் அமைப்பான Mercy Relief, ஜக்கர்த்தாவிற்கு நிவாரண உதவிக் குழுவை இன்று அனுப்பவிருப்பதாகக் கூறியுள்ளது.

சென்ற வாரம் பெய்த கனத்த மழையால் ஜக்கர்த்தாவில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

அவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது அமைப்பின் நோக்கம்.

சில இடங்களில் 20 சென்ட்டி மீட்டர் அளவிற்குத் தேங்கியிருந்த வெள்ள நீர், சில இடங்களில் இரண்டரை மீட்டர் அளவு வரை உயர்ந்தது.

அதனால் மின்தடை ஏற்பட்டதுடன் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

மாண்டோர் எண்ணிக்கை 65-ஐத் தாண்டிய நிலையில் அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

18 மில்லியன் பேர் அண்மை மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 173,000 அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தண்ணீர், உணவு, மருத்துவப் பராமரிப்பு, தங்குமிடம் போன்றவை உடனடியாகத் தேவைப்படுகின்றன.

அவற்றை வழங்குவதன் மூலம் சிரமமான இந்தக் காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கெடுக்க விரும்புவதாக Mercy Relief கூறியது.

இன்று முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நன்கொடை திரட்டவும் அது ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்கள் கடன்பற்று அட்டை, ரொக்கம், காசோலை, வங்கிப் பணமாற்றுச் சேவை உள்ளிட்ட வழிகளில் தங்கள் நன்கொடையை வழங்கலாம்.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்