Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் அதிகரிக்கும் COVID-19 சம்பவங்கள்...எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு

வாசிப்புநேரம் -
அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்களைக் கருத்தில் கொண்டு மலேசியாவின் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

COVID-19 நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் முகக்கவசம் அணியுமாறு அது பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

"நோன்புப் பெருநாள், விசாக தினம் ஆகிய விழாக்காலங்களில் உற்றார் உறவினர்களைச் சந்திக்கும்போது COVID-19 சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தினரையும், நண்பர்களையும் பாதுகாக்க முகக்கவசம் அணிவது நல்லது," என மலேசியாவின் சுகாதார இயக்குநர் இன்று (5 மே) தெரிவித்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை மொத்தம் 4,963 COVID-19 சம்பவங்கள் பதிவானதாக அவர் கூறினார்.

அது ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை பதிவான சம்பவங்களுடன் ஒப்புநோக்க 3 விழுக்காடு அதிகம்.

COVID-19 தொடர்பில் பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கூடியதாகவும் தகவல்கள் காட்டுகின்றன.

பள்ளிகள் மே 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டதாலும் வரும் 2 வாரங்களில் COVID-19 சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனச் சுகாதார நிபுணர்கள் கூறினர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்