Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் வெள்ளம் - வெளியேற்றப்படுவோர் எண்ணிக்கை குறைகிறது

மலேசியாவின் 5 மாநிலங்களில் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் வெள்ளம் - வெளியேற்றப்படுவோர் எண்ணிக்கை குறைகிறது

(கோப்புப் படம்: Arif KARTONO/AFP)

மலேசியாவின் 5 மாநிலங்களில் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் சில இடங்களில் நீர்மட்டம் குறைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களின் நிலையில் மாற்றமில்லை.

வானிலை மேம்பட்டுள்ளபோதும் சில வட்டாரங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பஹாங், சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா, சபா ஆகிய மாநிலங்களில் வசிப்போரை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அங்குள்ள ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்