Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெள்ள நிவாரண முயற்சிகள் பற்றி மலேசியப் பிரதமர் நாளை பேசவுள்ளார்

வாசிப்புநேரம் -
வெள்ள நிவாரண முயற்சிகள் பற்றி மலேசியப் பிரதமர் நாளை பேசவுள்ளார்

படம்: REUTERS/Lim Huey Teng

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  நாளை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் வெள்ள நிவாரண முயற்சிகள் பற்றிப் பேசவிருக்கிறார்.

வெள்ளத் தணிப்பு, நிர்வாக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துபேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.

மலேசிய வரலாற்றிலேயே ஆக மோசமானதாய்க் கருதப்படும் வெள்ளத்தால், 1.5 பில்லியன் டாலர் இழப்பு நேரிட்டதாக மதிப்பிடப்படுகிறது.

8 மாநிலங்களைப் பாதித்த வெள்ளத்தால் 50க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

10,000க்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa