Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"டாக்டர் மகாதீர் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்" - MUDA தற்காலிகத் தலைவர்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது (Mahathir Mohamad) மலேசியாவைச் சேர்ந்த இந்தியர்கள் "நாட்டிற்கு முழுமையாய் விசுவாசமாக" இல்லை என்று கூறியதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று Muda கட்சியின் தற்காலிகத் தலைவர் அமிரா அயிஷா (Amira Aisya) தெரிவித்துள்ளார்.

டாக்டர் மகாதீர் மலேசியர்களைத் தாழ்த்திப் பேசுவது இது முதல்முறை அல்ல என்றார் அவர்.

"நாம் அனைவரும் மலேசியாவிற்கு விசுவாசமாக இருக்கிறோம். மலேசியர்கள் மலேசியா மீது வைத்திருக்கும் விசுவாசத்தைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்," என்று X தளத்தில் அவர் பதிவிட்டார்.

சென்னையில் அமைந்துள்ள தமிழ்ச்செய்தி நிறுவனம் ஒன்று டாக்டர் மகாதீரைப் பேட்டி கண்டபோது, மலேசிய இந்தியர்கள் மலாய் மொழியில் பேசுவதற்குப் பதிலாகத் தமிழில் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

அவர்கள் நாட்டிற்கு முழு விசுவாசத்தைக் காட்டுவதில்லை.. எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டுடன் தங்களை அடையாளப்படுத்திக்
கொள்கிறார்கள் என்று டாக்டர் மகாதீர் சொன்னார்.

ஒருவர் மலேசியாவைத் தம்முடைய நாடு எனச் சொல்வதற்கு அவர் மலாய்க்காரராகத் தம்மைக் கருதவேண்டும் என்றார் அவர்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்