Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் ராணுவ அரசாங்கம் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் - மீண்டும் வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

மியன்மார் ராணுவ அரசாங்கம் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -
மியன்மார் ராணுவ அரசாங்கம் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் - மீண்டும் வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

படம்: AFP

மியன்மார் ராணுவ அரசாங்கம் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மியன்மாரில் பரவலாக நடைபெறும் அட்டூழியங்களுக்கு அந்நாட்டு ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன்(Antony Blinken) கூறினார்.

மியன்மார் தலைவர்களுக்கு ஆயுதம் விற்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துலகச் சமூகம் இன்னும் அதிகமாகப் பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.

மியன்மாருக்கு ஆயுதம் வழங்குவதில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு முக்கியப் பங்கிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிறிஸ்துமஸ் வார இறுதியின்போது காயா மாநிலத்தில், 38 பேர் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன.

கிராம மக்களான அவர்களில் பெரும்பாலோர் வன்முறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண்கள், குழந்தைகள் என்று அனைத்துலக உதவிக் குழு கூறியது. தனது ஊழியர்களில் இருவரும் கொல்லப்பட்டதாக Save the Children அறநிறுவனம் உறுதிப்படுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa