Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அழகிப் போட்டி ராணி - தாய்லந்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

வாசிப்புநேரம் -
மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அழகிப் போட்டி ராணி - தாய்லந்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

(கோப்புப் படம்: Handout / MISS GRAND INTERNATIONAL / AFP)

மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்நாட்டு அழகிப் போட்டி ராணி தாய்லந்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று (22 செப்டம்பர்) வியட்நாமிலிருந்து தாய்லந்தின் பேங்காக் நகருக்குச் சென்றிருந்த ஹான் லே என்று பிரபலமாக அழைக்கப்படும் தாவ் நந்தர் ஆங் (Thaw Nandar Aung) விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கடப்பிதழில் உள்ள ஒரு பிரச்சினையால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தாய்லந்துக் குடிநுழைவு அதிகாரிகள் கூறினர்.

மியன்மார் காவல்துறை விமான நிலையத்தில் வந்து தன்னைப் பெற்றுக்கொள்ளும் என அஞ்சுவதாக ஹான் லே தனது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார்.

தனக்கு உதவுமாறும் அவர் தாய்லந்து அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

பேங்காக் நகரிலிருந்து எங்கே செல்வது என்பது ஹான் லேயின் விருப்பம் என்று தாய்லந்து அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பேங்காக்கில் நடைபெற்ற அழகிப் போட்டியின்போது அவர் ராணுவத்தால் மியன்மாரில் பல மாண்டுபோவதாகவும் அவர்களைக் காப்பாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa