Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மியன்மாரின் தற்காப்பு அமைச்சர்

வாசிப்புநேரம் -
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மியன்மாரின் தற்காப்பு அமைச்சர்

AP Photo/Heng Sinith

மியன்மாரின் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் Mya Tun Oo ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆசியான் பரிந்துரைத்த அமைதித் திட்டத்தை மியன்மார் ராணுவம் பின்பற்றத் தவறியதைத் தொடர்ந்து, முதன்முறையாக அத்தகைய கூட்டம் நடந்துள்ளது.

மியன்மார் ராணுவத்தின் வன்முறையான நடவடிக்கையால், ஆசியான் சந்திப்பிலிருந்து மியன்மார் நீக்கப்படவேண்டும் என்று பரவலாக வலியுறுத்தப்பட்டது.

ஆசியான் சந்திப்பில் மியன்மார் தற்காப்பு அமைச்சர் கலந்துகொள்வதால், அதன் ராணுவத்தின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் மியன்மார் ஆலோசகர் ஆங் சான் சூ ச்சியின் (Aung San Suu Kyi) விசாரணைகள் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைப் பிரிவுக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

77 வயதான அவர் மீது சுமார் 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவை அனைத்திலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திருவாட்டி சூ ச்சி மீது மொத்தம் 150 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மியன்மார் அமைதியான முறையில் வழக்கநிலைக்குத் திரும்புவதற்கு ஆதரவு தெரிவிக்க, ஆசியான் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa