Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மர்மப் பெட்டிக்குள் என்ன?

வாசிப்புநேரம் -
மர்மப் பெட்டிக்குள் என்ன?

Wang Zhao/AFP

சீனாவின் ஷங்ஹாய் நகரில் பிரபலமான மர்மப் பெட்டி விளையாட்டில் கிடைக்கும் பரிசுகளுக்கு, அதிகபட்ச விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் மர்மப் பெட்டி விளையாட்டில், வாடிக்கையாளர்கள் சிறிதளவு பணம் கட்டிப் பெட்டி ஒன்றைப் பெறுவர். 

அந்தப் பெட்டிக்குள்  என்ன இருக்கிறது என்பது அவர்களுக்கு முதலில் தெரியாததால் அது மர்மப் பெட்டி விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. 

பெட்டிகளில் மருந்துகள், உயிருள்ள விலங்குகள், தீப்பற்றக்கூடிய பொருள்கள் போன்றவை வைக்கப்படக் கூடாது என, நகரச் சந்தை நிர்வாகம் தெரிவித்தது. 

அவற்றைப் பெட்டிகளில் வைத்து விற்பதைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் கூறினர். 

சில வேளைகளில் பெட்டிகளுக்குள் விலையுயர்ந்த பொருள்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.  அதனால் சீனாவில் பலரும் அதை விரும்பி விளையாடுகின்றனர். 

பெட்டிக்குள் இருக்கும் பொருளின்  விலை அதிகபட்சமாக 200 யுவான் (31 டாலர்) வரை மட்டுமே இருக்கலாம் என்று ஷங்ஹாயில் அறிவிக்கப்பட்டது. 

குறைந்த விலையுள்ள பொருள்களைப் பெற விரும்பாத மக்கள், அந்த விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்ப்பர் என நம்பப்படுகிறது. 

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa