Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1MDB வழக்கு - மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபின் சட்டக்குழுத் தலைமை வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகிக்கொள்ளச் செய்த விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

வாசிப்புநேரம் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் இறுதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து விலக அவரது சட்டக் குழுவின் தலைமை வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தேக் (Hisyam Teh Poh Teik) சமர்ப்பித்த விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நேரப் பற்றாக்குறையைக் காரணமாகச் சுட்டி, வழக்கிலிருந்து விலகிக்கொள்ள அவர் முன்னதாக விண்ணப்பம் செய்திருந்தார். 

திரு. நஜிபின் இறுதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. 

1MDB தொடர்பான ஊழலில் ஈடுபட்டதாக அவருக்கு ஏற்கெனவே 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்கிறார்.

வழக்கை 2, 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கும்படி திரு. நஜிப் கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் நேற்றுமுன்தினம் நிராகரித்தது.

புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும் திரு. நஜிப் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கும் நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

மேல் முறையீட்டு வழக்கில் தோல்வியுற்றால், அவருக்குச் சிறைத்தண்டனையும் பல மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.

ஆதாரம் : CNA/aw

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்