Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் சிறைக்குத் திரும்பத் தயார்

வாசிப்புநேரம் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் முழுமையாகக் குணமடைந்திருப்பதாகவும் இப்போது அவர் சிறைக்கு உடனே திரும்பத் தயாராகிவிட்டதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது. 

அவர் மருத்துவமனையிலிருந்து காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது. 

69 வயது நஜிப் கடந்த மாதம் 23ஆம் தேதி சிறை சென்றார். 

அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இம்மாதம் (செப்டம்பர் 2022) 4ஆம் தேதி முதல் அவர் மருத்துவமனைக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறார். 

வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை அவரை வாட்டுவதாக அவரது மகளும் அரசாங்க அதிகாரிகளும் கூறுகின்றனர். 

மருத்துவமனையில் பல பரிசோதனைகளுக்குப் பிறகு  நஜிப் சீரான உடல்நிலையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக மலேசியச் சுகாதார அமைச்சு கூறியது. 

ஆதாரம் : AGENCIES/ga(jo)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்