Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் சிறையிலிருந்து மறுவாழ்வு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

வாசிப்புநேரம் -

1MDB ஊழல் வழக்கின் தொடர்பில் கடந்த மாதம் சிறைக்கு  அனுப்பப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்(Najib Razak), தற்போது கோலாலம்பூரில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

நஜிபை மருத்துவப் பரிசோதனைக்காக அந்த மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளுமாறு இம்மாதம் (செப்டம்பர் 2022) 12ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நஜிபின் உடல்நலம் கருதி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக , மலேசிய சிறைத் துறை கூறியது.

"செப்டம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனை நஜிபை மறுவாழ்வு மருத்துவமனைக்கு  அனுப்பியது. அன்றிலிருந்துஅங்குச் சிகிச்சை பெறும் அவரின் உடல்நிலை  கண்காணிக்கப்படுகிறது" 

என்று சிறைத் துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. 

மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதி கிடைத்ததும், அவர் மீண்டும் காஜாங் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்