நேப்பாளத்தை உலுக்கிய 5.6 ரிக்டர் நிலநடுக்கம்...

(U.S. Geological Survey, ready.gov)
நேப்பாளத்தில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் சில வீடுகள் சேதமடைந்தன.
இந்தியத் தலைநகர் புது டில்லி வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
நேப்பாளத் தலைநகர் காட்மாண்டிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் கூறியது.
உயிருடற்சேதம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை.
2015ஆம் ஆண்டு நேப்பாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் 9ஆயிரம் பேர் மாண்டனர்.