நேப்பாள நிலச்சரிவில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 22க்கு அதிகரித்தது

கோப்புப்படம்
நேப்பாளத்தில் பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் மாண்டனர்.
10 பேர் காயமுற்றனர்.
சடலங்களை மீட்க அதிகாரிகள் அடைமழையில் போராடுகின்றனர்.
தலைநகர் காத்மாண்டுவிற்கு அருகில் உள்ள அச்சாம் வட்டாரத்தில் அந்தப் பேரிடர் ஏற்பட்டது.
வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்த 1,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்கள், நொறுங்கி உடைந்த பாலம், நெஞ்சளவு தண்ணீரில் நடந்து செல்லும் கிராமவாசிகள் ஆகியோரின் படங்கள் உள்ளூர் ஊடகங்களில் காட்டப்பட்டன.
ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே அந்நாட்டில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு மட்டும் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளத்தில் சிக்கி நேப்பாளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 70.