Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோக்கியோவில் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ள ஹாரி போட்டர் பூங்கா

வாசிப்புநேரம் -
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் வரும் ஜூன் 16ஆம் தேதி ஹாரி போட்டர் (Harry Potter) பூங்கா திறக்கப்படவிருப்பதாக Warner Brothers Studio நேற்று (15 மார்ச்) அறிவித்தது.

அந்தப் பூங்காவுக்குச் செல்பவர்கள் ஹாரி போட்டர் திரைப்படம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உலகிலேயே மிகப் பெரிய உள்ளரங்கு ஹாரி போட்டர் பூங்காவாக அது திகழும்.

உலக அளவில் அது 2ஆவது பூங்கா. ஆசியாவுக்கு முதல் பூங்கா.

உலகின் முதல் ஹாரி போட்டர் பூங்கா லண்டனில் உள்ளது. அது 2012ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

தோக்கியோவில் திறக்கப்படும் ஹாரி போட்டர் பூங்காவுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை மார்ச் 22ஆம் தேதி தொடங்கும்.

அவற்றை முன்கூட்டியே வாங்க வேண்டும். பூங்கா அமைந்துள்ள பகுதியில் நுழைவுச்சீட்டுகளை வாங்க முடியாது.

நுழைவுச்சீட்டுக்கான விலை:

🎫பெரியவர்கள்: 6,300 யென் (சுமார் 64 வெள்ளி)

🎫12 முதல் 17 வயது வரையிலானவர்கள்: 5,200 யென் (சுமார் 53 வெள்ளி)

🎫சிறுவர்கள்: 3,800 யென் (சுமார் 39 வெள்ளி)

4 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்