Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

வாசிப்புநேரம் -

மலேசியாவின் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளனர். பதவியேற்புச் சடங்கு கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையான இஸ்தானா நெகாராவில் (Istana Negara) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் 28 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்துள்ளார்.

முன்னைய அரசாங்கங்களில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களின் எண்ணிக்கையை விட அது குறைவு.

திரு அன்வார் இரண்டு துணைப் பிரதமர்களையும் நியமித்துள்ளார்.

ஒருவர் தேசிய முன்னணி கூட்டணியின் அகமது ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi).

மற்றவர் GPS எனும் சரவாக் கட்சிகள் கூட்டணியின் ஃபடிலா யூசோஃப் (Fadillah Yusof).

திரு அன்வார் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்