Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியா 3 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது: தென்கொரிய அதிகாரிகள்

வாசிப்புநேரம் -

வடகொரியா, மூன்று புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளதாகத் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணைகள் ஒன்றன்பின் ஒன்றாய்ப் பாய்ச்சப்பட்டதாகவும் சோதனைகள் அனைத்தும் ஒரு மணி நேரத்துக்குள் முடிந்ததாகவும் அவர்கள் கூறினர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்குமான அதிகாரத்துவப் பயணத்தை நிறைவுசெய்தத்திருந்த நிலையில் அந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

சுமார் ஐந்தாண்டுக்குப் பிறகு வடகொரியா அதன் முதல் நிலத்தடி அணுவாயுதச் சோதனையை நடத்தத் தயாராகிக்கொண்டிருக்கலாம் என்று அமெரிக்க ராணுவமும் வேவு அமைப்புகளும் கூறியுள்ளன.

பியோங்யாங்கின் மிரட்டல்களைச் சமாளிக்க, அதிபர் பைடனும், தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோலும் (Yoon Suk-yeol) பெரிய அளவில் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்த இணக்கம் கண்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்