Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியாவில் மேலும் 21 பேர் கிருமித்தொற்றால் மரணம்

வாசிப்புநேரம் -
வடகொரியாவில் மேலும் 21 பேர் கிருமித்தொற்றால் மரணம்

(படம்: KCNA VIA KNS / AFP)

வடகொரியாவில் மேலும் 21 பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர்.

அங்கு 288,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் கிருமித்தொற்று நிலவரத்தைப் பெரும் பேரிடர் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un)வருணித்தார்.

இதுவரை கண்டிராத அளவில் நாடு பெரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.

இருப்பினும் நோய்ப்பரவலைக் கையாளும் விதத்தை சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ளமுடியும் என்றும் தற்போதைய நிலவரத்திலிருந்து மீண்டு வரலாம் என்றும் திரு.கிம் கூறியதாக KCNA செய்தி நிறுவனம் கூறியது.

சில தினங்களுக்கு முன்னதாக வடகொரியாவில் கிருமித்தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

குறைந்தது ஒருவர் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் வடகொரியாவுக்குத் தடுப்பூசிகளை வழங்கத் தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் (Yoon Suk-yeol) முன்வந்திருக்கிறார்.

அதுகுறித்த பேச்சுவார்த்தைகளை முன்வைக்கப்போவதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa