வட கொரியாவில் 2 மில்லியன் பேருக்குக் காய்ச்சல்

(கோப்புப் படம்: AFP / KIM Won Jin)
வட கொரியாவில் புதிதாக 263,000 பேருக்கும் மேல் COVID-19 நோய் தொற்றியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மாண்டவர் எண்ணிக்கை 65-க்கு உயர்ந்திருக்கிறது.
அவர்களில் எத்தனை பேருக்கு COVID-19 நோய் இருந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் காய்ச்சல் வந்திருப்பதாக வட கொரியா கூறுகிறது.
மருந்து உள்ளிட்ட பொருள்களுக்கான உற்பத்தியைத் தற்போது வட கொரியா அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
வட கொரியாவின் 3 பெரிய விமானங்கள் மருந்துகளை ஏற்றிவரச் சீனாவுக்குச் சென்றுள்ளன.
மிகப்பெரிய COVID-19 பரவலைச் சமாளிக்க வட கொரியா போராடி வருகிறது.
-Reuters