Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியா: COVID-19 கிருமித்தொற்றால் குறைந்தது ஒருவர் மரணம்

வாசிப்புநேரம் -
வடகொரியா: COVID-19 கிருமித்தொற்றால் குறைந்தது ஒருவர் மரணம்
படம்: Anthony WALLACE / AFP

வடகொரியாவில் குறைந்தது ஒருவர் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக அங்கு கிருமித்தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் மாத இறுதியிலிருந்து சுமார் 187,000க்கும் மேற்பட்டோர் அங்கு தனிமைப்பட்டிருப்பதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான KCNA தெரிவித்தது.

அடையாளம் தெரியாத காய்ச்சலோடு இதுவரை 350,000க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 162,000க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் KCNA கூறியது.

இருப்பினும் அவர்கள் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை அது குறிப்பிடவில்லை.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் மாண்டதாகவும் அவர்களில் ஒருவர் ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்றுக்கு எதிரான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தேசிய அளவிலான முடக்கநிலையை அறிவித்திருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa