Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியாவின் தற்காப்புத் திறன்களை மேம்படுத்தவும்! - கிம் ஜோங் உன் உத்தரவு

வாசிப்புநேரம் -

வடகொரியாவின் தற்காப்புத் திறன்களை மேம்படுத்தும்படித் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) உத்தரவிட்டிருக்கிறார்.

நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் முக்கியச் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

அச்சுறுத்தும் சக்திகளை எதிர்கொள்வதற்கு ராணுவம் அதன் சுயதற்காப்புத் திறன்களை மேம்படுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வடகொரியாவின் முக்கிய ராணுவச் செயல்திட்டம் தொடர்பான தகவல்களை அந்நாட்டின் அதிகாரபூர்வ KCNA  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நாட்டின் போர்த்திட்டங்களை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகவும் முன்னணி ராணுவப் படைகளின் பணியை மேம்படுத்தவிருப்பதாகவும் வடகொரியா குறிப்பிட்டது.

ஏப்ரலில் திரு. கிம் எதிரியைத் துடைத்தொழிக்க ராணுவத்தின் திறன்களை முற்றிலும் மேம்படுத்தவிருப்பதாகச் சூளுரைத்திருந்தார்.

இந்த வருடம் மட்டுமே வடகொரியா எண்ணிலடங்காத புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியிருக்கிறது.

கூடிய விரையில் ஐந்தாண்டுகளில் முதன்முறையாக அது அணுவாயுதச் சோதனை ஒன்றை நடத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. 

அந்தச் சோதனை எந்நேரமும் நடத்தப்படலாம் என்று அமெரிக்க, தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்