Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரிய தலைநகரில் 5 நாள் முடக்கநிலை

வாசிப்புநேரம் -

வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் (Pyongyang) 5 நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அடையாளம் காணமுடியாத சுவாச நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடியிருப்பதால் அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அரசாங்க அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி தென் கொரியாவில் உள்ள NK செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அதில் COVID-19 பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் பியோங்யாங்கில் வசிப்போர் வீட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை (29 ஜனவரி) வரை இருக்க வேண்டும்; ஒரு நாளில் பலமுறை காய்ச்சல் உள்ளதா என்பதைச் சோதித்துப்பார்க்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடுமையான நடவடிக்கைகளை எதிர்பார்த்து, பியோங்யாங் குடியிருப்பாளர்கள் அத்தியாவசியப் பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டதாக NK செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் புதிய முடக்கநிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை.

வடகொரியாவில் முதல் கோவிட் நோய்த்தொற்று கடந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டது.

இருப்பினும் சென்ற ஆகஸ்ட் மாதம், அந்நோயை வெற்றிகண்டதாகப் பியோங்யாங் அறிவித்தது.

பெரிய அளவில் கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ளப் போதுமான வசதிகள் இல்லாததால் அங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை அது உறுதிசெய்யவில்லை.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa