Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரயில்வே ஏவுகணையைச் சோதித்தது வடகொரியா

வாசிப்புநேரம் -
ரயில்வே ஏவுகணையைச் சோதித்தது வடகொரியா

படம்: REUTERS/Denis Balibouse

வட கொரியா ரயில்வே ஏவுகணையைச் சோதித்துப் பார்த்திருக்கிறது.

நேற்றுப் பிற்பகல் பாவனைப் பயிற்சியின்போது அந்தச் சோதனை இடம் பெற்றதாக வட கொரிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

வட கொரியாவின் புதிய ஏவுகணைச் சோதனை மிகுந்த வருத்தமளிப்பதாக சோல் சொன்னது.

அந்தச் சோதனை வட்டார அமைதிக்கு அச்சுறுத்தல் என்று தோக்கியோ கூறியது.

சீன எல்லையை ஒட்டிய நார்த் பியோங்கான் (North Pyongan) வட்டாரத்திலிருந்து வட கொரியா இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக தென் கொரிய ராணுவம் கூறியது.

ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்றுள்ள வட கொரியர்கள் 6 பேருக்கு அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அதன் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகப் பியோங்யாங் (Pyongyang) எச்சரித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa