Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இன்னுமோர் ஏவுகணையைப் பாய்ச்சியது வடகொரியா... ஒரே வாரத்தில் 3 ஏவுகணைகள்!

வாசிப்புநேரம் -
இன்னுமோர் ஏவுகணையைப் பாய்ச்சியது வடகொரியா... ஒரே வாரத்தில் 3 ஏவுகணைகள்!

(கோப்புப் படம்: Korean Central News Agency/Korea News Service via AP)

வட கொரியா இன்னோர் ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது. ஒரே வாரத்தில், பியோங்யாங் பாய்ச்சியுள்ள மூன்றாவது ஏவுகணை இது.

அடையாளம் காணப்படாத ஏவுகணையை தென் கொரிய ராணுவ அதிகாரிகள் கண்டனர். ஆனால், அவர்கள் அதன் தொடர்பில் வேறு விவரங்களை வெளியிடவில்லை.

அது, புவியீர்ப்பு ஏவுகணையாக இருக்கக்கூடுமென ஜப்பானியக் கடலோரக் காவல்படை நம்புகிறது.

நாட்டின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றதால், வட கொரியர்கள் 6 பேர்மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது.

தனது தேசியத் தற்காப்புத் திறன்களை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகப், புதுவகை ஆயுதங்கள் சோதிக்கப்படுவதாக, வட கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்