Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ராணுவ வேவுத் துணைக்கோளத்தைப் பாய்ச்சவிருக்கும் வடகொரியா

வாசிப்புநேரம் -
ராணுவ வேவுத் துணைக்கோளத்தைப் பாய்ச்சவிருக்கும் வடகொரியா

(கோப்புப் படம்: Reuters)

வடகொரியா முதல் ராணுவ வேவுத் துணைக்கோளத்தை அடுத்த மாதம் விண்ணில் பாய்ச்சவிருக்கிறது. 

அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் கண்காணிக்கவும் அது அவசியம் என்று பியோங்யாங் கூறியது. 

ஐக்கிய நாட்டு நிறுவனத் தடைகளை மீறி வடகொரியா புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சக்கூடும் என்று அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கூறிவருகின்றன. 

2016 இல் வடகொரியா பாய்ச்சிய புவியீர்ப்பு ஏவுகணை ஜப்பானின் தென்பகுதியைத் தாண்டிச் சென்றது.

அப்போதும் துணைக்கோளத்தை விண்ணில் பாய்ச்சப் போவதாகப் பியோங்யாங் கூறியிருந்தது. 

அதேபோல வடகொரியா மீண்டும் செயல்படக்கூடும் என்று ஜப்பான் கருதுகிறது. 

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அமெரிக்கா பியோங்யாங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்