Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் நெருக்கடிக்கு 'Superman' கதாபாத்திரத்தால்கூடத் தீர்வுகாண முடியாது: ஆசியான் சிறப்புத் தூதர்

வாசிப்புநேரம் -

மியன்மார் நெருக்கடிக்கு 'Superman' கதாபாத்திரம் வந்தால்கூடத் தீர்வுகாண முடியாது என்று மியன்மாருக்கான ஆசியான் சிறப்புத் தூதர் பிராக் சோக்கோன் (Prak Sokhonn) கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம், மியன்மாரில் ராணுவம் அப்போதைய ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்து அங்கு உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது.

அதற்குத் தீர்வுகாண ஆசியான் அமைப்பு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் பலனளிக்கவில்லை.

மியன்மார் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கம் கொண்ட 5 அம்சத் திட்டத்தில் விரைவில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது என்று திரு. சோக்கோன் சொன்னார்.

"நான் வெறும் சிறப்புத் தூதர்தான். சூப்பர்மேன் இல்லை"

என்று கம்போடியத் தலைநகர் புனோம் பென்னில் (Phnom Penh) செய்தியாளர்களிடம் திரு. சோக்கோன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம் மியன்மாரில் வன்முறைச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகிறது.

ராணுவமும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் அது அழைப்பு விடுத்தது. 

மியன்மார் நெருக்கடிக்குத் தீர்வுகாணப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று கம்போடிய வெளியுறவு அமைச்சருமான திரு. சோக்கோன் குறிப்பிட்டார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்