Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கண்ணாடி போன்ற இதழ்கள் - புதிய வகை ஆர்க்கிட் மலரைக் கண்டுபிடித்த ஜப்பானிய அறிவியலாளர்கள்

வாசிப்புநேரம் -
ஜப்பானிய அறிவியலாளர்கள் ஒரு புதிய வகை ஆர்க்கிட் மலரைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கண்ணாடி போன்ற மெலிந்த இதழ்களுடன் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் இருக்கும் அந்த மலரை அவர்கள் பொதுவான இடத்தில் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

Kobe பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் 10 ஆண்டுக்குப் பிறகே Spiranthes Hachijoensis என்றழைக்கப்படும் அந்த மலரின் அடையாளத்தை உறுதிசெய்தனர்.

அந்த மலரைப் பூங்காக்களிலும் தோட்டங்களிலும் காணலாம் என்று ஆய்வாளர்களில் ஒருவர் AFP செய்தியிடம் கூறினார்.

அந்த ஆர்க்கிட் மலரும்போது பார்ப்பதற்குக் கண்ணாடியால் ஆன கலைப்பொருளைப் போன்று இருக்கிறது என்று பல்கலைக்கழகம் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.

ஜப்பானில் 8ஆம் நூற்றாண்டில் வெளியான ஆகப் பழைய கவிதைகளிலும் அந்த மலரைப் பற்றிக் கூறப்பட்டது.

தோக்கியோவின் ஹச்சிஜோஜிமா தீவில் அவற்றைக் காண்பதால் அந்த Spiranthes வகை மலர் ஹச்சிஜோன்சிஸ் என்று அழைக்கப்படுகிறது.

அதுபற்றி Journal of Plant Research சஞ்சிகையில் சென்ற வாரம் தகவல் வெளியிடப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்