Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அடுத்த 5 மாதங்களுக்கு ஆசியானின் தென்பகுதியில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்

வாசிப்புநேரம் -
ஆசியானின் தென்பகுதி வட்டாரத்தில் அடுத்த மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புகைமூட்டம் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு நிலையம் வறண்ட பருவநிலை தொடங்குவது குறித்த முதல்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புருணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லந்தின் தென்பகுதி ஆகிய இடங்களில் கடுமையான வறட்சி நீடிக்கலாம்.

El Nino பருவநிலைச் சூழல் வட்டாரத்தை நெருங்கும் வேளையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடலிலும், வளி மண்டலத்திலும் வெப்பநிலை மாறுபாட்டைத் தூண்டும் இயற்கை நிகழ்வு El Nino.

மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் El Nino 9 மாதங்கள் வரை நீடிக்கும்.

அது கடல் பகுதியில் வெப்பத்தைக் கடுமையாக்கி நிலத்தில் வறட்சியை நீட்டிக்கும்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்