விவசாய நிலம் நீருக்கு அடியில்...உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் பாகிஸ்தான்

(படம்: AFP/Fida Hussain)
பாகிஸ்தான் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது.
அதன் விவசாய நிலத்தின் கணிசமான பகுதி நீருக்கு அடியில் கிடக்கிறது.
ஏற்கனவே பொருளியல் நெருக்கடியால் பாகிஸ்தானில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்தது.
தற்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைப்பதாகத் தெரியவில்லை.
வரலாறு காணாத பருவமழையும், மலை உச்சியில் பனிப்பாறைகள் உருகுவதால் தாழ்வான இடங்களை நோக்கிப் பாயும் தண்ணீரும் பேரிடரை ஏற்படுத்திவிட்டன.
பருவநிலை மாற்றமே காரணம் என்றும் பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் (Antonio Gutteres) கூறினார்.
அவர் பாகிஸ்தானில் வெள்ள நிலவரத்தை நேரில் பார்வையிடச் சென்றார்.