Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"அஞ்சியது இடம்பெறவில்லை" - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கைது ஆணை ரத்து

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாம் அஞ்சியதைப் போல் இல்லாமல் கைது செய்யப்படவில்லை.

அவருக்கு எதிரான கைதாணை ரத்து செய்யப்பட்டது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானியத் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் நீதிமன்ற வாசலுக்கு வெளியே காரில் இருந்தபடியே நீதிமன்றத்துக்கு வந்துவிட்டதை உறுதிசெய்யும் கையெழுத்தைப்போட்டுவிட்டு வீட்டுக்குப் போக அனுமதிக்கப்பட்டார்.

ஆதரவாளர்கள் பெரிய அளவில் திரண்டுவிட்டதால் அவரால் நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல முடியவில்லை.

நீதிமன்ற வாசலில் திரு. இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மக்கள் முதலில் தாக்கியதால் கண்ணீர்ப் புகை கொண்டு கூட்டத்தைக் கலைத்ததாக இஸ்லாமாபாத் காவல்துறைத் தலைவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்