Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பொதுமக்களை ராணுவ விசாரணைக்கு ஒப்படைத்த பாகிஸ்தான் நீதிமன்றம்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் நீதிமன்றம் பொதுமக்களில் 16 பேரை விசாரணைக்காக ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் (மே மாதம்) பாகிஸ்தானின் முன்னைய பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கைதுசெய்யப்பட்டபோது அந்த 16 பேரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களில் ஒருவர் திரு.கானின் அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர். அவர் அடுத்து வரும் மாநிலத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

வழக்கமாக, அரசாங்கத்தின் எதிரிகளை விசாரிக்க ராணுவ நீதிமன்றங்கள் பயன்படுத்தப்படும். ஆனால் அதில் சாதாரணப் பொதுமக்களை விசாரிக்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்தின் முடிவை அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் ஆதரித்துப் பேசியுள்ளார்.

வெளியிலுள்ளவர்கள் யாரும் விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் நுழைய முடியாது. செய்தி ஊடகங்களுக்கும் அனுமதியில்லை.

திரு.கான் கடந்த மே 9ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். ஆனால் 3 நாள்கள் கழித்து, அந்தக் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவித்த பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் திரு.கானை விடுவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்