Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும் சுற்று வட்டாரங்களிலும் கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்த அந்நாட்டு அதிபர் ஒப்புதல்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்த, அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) ஒப்புதல் வழங்கியுள்ளார்.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும் சுற்று வட்டாரங்களிலும் கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்த அந்நாட்டு அதிபர் ஒப்புதல்

(கோப்புப் படம்: AFP/Ted ALJIBE)

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் சிலவற்றைத் தளர்த்த, அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) ஒப்புதல் வழங்கியுள்ளார்.

6 வாரங்களுக்கு முன் உச்சத்தைத் தொட்ட அன்றாடக் கிருமித்தொற்று எண்ணிக்கை, தற்போது குறையத் தொடங்கியிருப்பது அதற்குக் காரணம்.

மெட்ரோ மணிலா பகுதி, அதனைத் சுற்றியுள்ள மாநிலங்கள் ஆகியவற்றில், சமய ஒன்றுகூடல்களுக்கும், உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ளவும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு அனுமதிக்கப்படும்.

இருப்பினும், அத்தியாவசியமற்ற பயணத்துக்கு எதிரான தடை, தொடர்ந்து நீடிக்கும்.

வெளிப்புறச் சுற்றுப்பயணத் தலங்கள் திறந்திருக்க அனுமதி உண்டு; ஆனால், அவற்றில் 30 விழுக்காட்டுப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சமய ஒன்றுகூடல்கள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றில், அது நடைபெறும் இடத்தில் எத்தனைபேர் இருக்கமுடியுமோ அதில் 10 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மெட்ரோ மணிலா பகுதியிலும் சுற்று மாநிலங்களிலும் நடப்பில் உள்ள தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள், இம்மாத இறுதிக்குள், மீண்டும் மறுஆய்வு செய்யப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்