Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மாவார் சூறாவளி: முழுவிழிப்பு நிலையில் பிலிப்பின்ஸ்

வாசிப்புநேரம் -
பிலிப்பின்ஸை (Philippines) மாவார் (Mawar) சூறாவளி கடந்துசெல்லலாம் என முன்னுரைக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துவருகின்றனர்.

குவாமில் (Guam) இருந்து சூறாவளி பிலிப்பின்ஸை நோக்கிச் செல்கிறது.

இன்றிரவு (26 மே) அல்லது நாளைக் காலை (27 மே)சூறாவளி பிலிப்பின்ஸைக் கடக்கலாம்.

மாவார் என அழைக்கப்படும் சூறாவளிக்கு பிலிப்பின்ஸில் Betty எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்கிறது.

மணிலா பெருநகரில் பருவமழை முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது.

சில பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்